தினமும் ஒரு கொய்யாப்பழம்.. கொத்து கொத்தாக கிடைக்கும் நன்மைகள்..!
வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கொய்யா உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கொய்யாவில் அதிக நார்ச்சத்து மற்றும் லோ-கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும்.
இதில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைக்கிறது.
இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் ஒரு நல்ல தேர்வாக அமையும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின்பி3 அதிகம் உள்ளது. இது மூளை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
இதில் கரோட்டின், லைகோபீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கொய்யாவில் இருக்கும் அதிக அளவிலான வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியின் தீவிரத்தை கணிசமாக குறைக்கும் திறன்கொண்டது.