நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாகவும் பயன்படும்.
Photo: MetaAI
செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. மேலும் , வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
Photo: MetaAI
நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும்.
Photo: MetaAI
நூல்கோல் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும்.
Photo: MetaAI
உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையை குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
Photo: MetaAI
சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Photo: MetaAI
இதயம் சம்பந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Photo: MetaAI
உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது.