அழகோடு ஆபத்தும் நிறைந்த இடம்..!

தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் அழகிய பள்ளத்தாக்கு அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு.
மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட, அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடமாக இது இருக்கிறது.
கண்ணைக்கவரும் இந்தப்பள்ளத்தாக்கு அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மணல் அரிப்பால் இந்தப் பள்ளத்தாக்கு உருவாகியுள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பள்ளத்தாக்கு சுவர்களில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியால் அங்கு புகைப்படம் எடுப்பது கடினம்.
அழகு நிறைந்து இந்த இடத்தில் ஆபத்தும் இருக்கிறது.
இங்கு ஏற்படும் திடீர் வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.