சினிமா வாழ்க்கையில் அவரைத்தான் தெய்வமாக கருதுகிறேன் - நடிகர் வடிவேலு
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு.
இவர் சினிமா அனுபவங்கள் குறித்து நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளார்.
சினிமா வாழ்க்கையில் நடிகர் ராஜ்கிரனை தெய்வமாக கருதுகிறேன். அவர்தான் எனக்குள் இருக்கும் திறமையை அறிந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.- நடிகர் வடிவேலு
சினிமாவில் நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகம் இருக்கிறது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன்.
கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி. இதை கமல்ஹாசனிடம் சொன்னபோது, இதுமாதிரி நிறைய வரும். அதை தாண்டி நடித்து முன்னேற வேண்டும் என்றார்.
நான் மீண்டும் நடிக்க வந்ததும் என்னை விமர்சனம் செய்தவர்கள் யாரையும் காணவில்லை. தொழிலை நேசித்து செய்தால் தோற்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.