தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அமலா பால் ‘கடாவர்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

Instagram: amalapaul
அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் மலையாளத்தில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது.
Instagram: amalapaul
இந்த படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்ததாக அமலா பால் குற்றம் சாட்டி உள்ளார்.
Instagram: amalapaul
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு திரைப்பட விழாக்களில் பங்கேற்கிறேன். ரசிகர்களையும், பார்வையாளர்களையும் நேரில் காணும்போது உற்சாகம் பிறக்கிறது.
Instagram: amalapaul
‘கடாவர்' படத்தில் எனது கதாபாத்திரம் புதுமையாகவும், வலிமையாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தை நானே தயாரித்தேன்.
Instagram: amalapaul
4 ஆண்டு காலம் கடினமாக உழைத்தோம். பல போராட்டங்களுக்கு இடையே இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்.
Instagram: amalapaul
ஆனால் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது.
Instagram: amalapaul
இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக முயற்சி செய்தனர்.
Instagram: amalapaul
வாழ்க்கையில் பலர் எதிராக உள்ளனர். யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. ஆனாலும் சிலர் உதவினர். கடவுளின் ஆசியால் தடைகளை தாண்டி வருகிறது.
Instagram: amalapaul