தமிழ், தெலுங்கில் வெளியான வாரியர் படத்தில் நடித்து பிரபலமானவர் கிரித்தி ஷெட்டி. வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
Instagram: krithi.shetty_official
கிரித்தி ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், ‘‘ஒரு வித்தியாசமான நடிகையாக ரசிகர்களிடம் அடையாளம் காணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
Instagram: krithi.shetty_official
அதனால்தான் உப்பென்னா தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தேன். வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு புகலிடம் அவர்தான்.
Instagram: krithi.shetty_official
விஜய்சேதுபதியோடு நடித்ததால் எனக்கும் அந்த எண்ணம் வந்ததோ என்னவோ தெரியவில்லை. நான் நடித்த கமர்சியல் படங்கள் தொடர்ந்து திரைக்கு வந்தவண்ணம் உள்ளன.
Instagram: krithi.shetty_official
சூர்யா மற்றும் சுதிர் பாபு ஆகியோருடன் நான் நடிக்கும் படங்கள் வித்தியாசமாக இருக்கும். ஒரு சமூக சேவை தொண்டு நிறுவன அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என சிறு வயது முதலே எனக்கு ஆசை.
Instagram: krithi.shetty_official
விரைவில் இது சம்பந்தப்பட்ட பணியை ஆரம்பிக்க போகிறேன்.
Instagram: krithi.shetty_official
எனது படங்களின் வெற்றி-தோல்வியை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எல்லா படத்திலும் இருந்து ஏதாவது ஒரு படிப்பினை கிடைக்கிறது” என்றார்.
Instagram: krithi.shetty_official