40 வயதில் காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா..!
தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.
இவர் தமிழில் மருதலை, ஜாம்பவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 40 வயதாகும் நிலையில் காதலர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 12-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.