தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா கடந்த வருடம் நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

Instagram: pranitha.insta
இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
Instagram: pranitha.insta
திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.
Instagram: pranitha.insta
சில தினங்களுக்கு முன்பு பிரணிதா பீமனா அமாவாசை தினத்தையொட்டி தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு, இந்த நாளில் கணவருக்கு பாத பூஜை செய்வது சிறப்பானது என்று பதிவிட்டு இருந்தார்.
Instagram: pranitha.insta
அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் பிரணிதாவை ஆணாதிக்கத்துடன் தன்னை இணைத்து கொண்டு இருக்கிறார் என்று கேலி செய்து விமர்சித்தனர். இதற்கு பிரணிதா பதிலடி கொடுத்துள்ளார்.
Instagram: pranitha.insta
நான் எப்போதும் பாரம்பரிய முறைகளை பின்பற்றும் பெண்தான்.
Instagram: pranitha.insta
கவர்ச்சியான சினிமா துறையில் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்பதற்காக, பார்த்து வளர்ந்த ஒரு சடங்கை பின்பற்ற மாட்டேன் என்று அர்த்தம் இல்லை.
Instagram: pranitha.insta
சடங்கை முழுமையாக நம்புகிறேன். நான் எப்போதும் மனதளவில் ஒரு பாரம்பரியப் பெண்ணாகவே இருக்கிறேன். குடும்பத்துடன் தொடர்பு உள்ள சடங்குகளை நேசிக்கிறேன்.
Instagram: pranitha.insta
ஒருவர் நவீன வாழ்க்கையை கடைபிடிக்கிறார் என்பதற்காக தனது வேர்களை மறந்துவிடுகிறார் என்று அர்த்தமல்ல.
Instagram: pranitha.insta