ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பேச்சிலர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி.
Instagram: divyabharathioffl
மதில் மேல் காதல், ஆசை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
Instagram: divyabharathioffl
திவ்யா பாரதியை வலைத்தளங்களில் பலர் உருவக்கேலி செய்து வந்தனர். இதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
Instagram: divyabharathioffl
இதுகுறித்து திவ்யா பாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபகாலமாக நான் உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன்.
Instagram: divyabharathioffl
எனது உடல் தோற்றம் போலியானது என்றும், எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருக்கிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் என்றும் சிலர் கேலி பேசுகிறார்கள்.
Instagram: divyabharathioffl
நான் எலும்பு கூடுபோல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Instagram: divyabharathioffl
கல்லூரி நாட்களிலும் பலர் என்னை உருவக்கேலி செய்துள்ளனர். இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது.
Instagram: divyabharathioffl
எனது உடலை வெறுக்கும்படியும் செய்தது. மக்கள் முன்னால் செல்ல பயமாக இருந்தது.
Instagram: divyabharathioffl
மாடலிங்கில் நுழைந்து எனது படங்களை வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்ததும் அதை பார்த்து என் உடல் அமைப்பை பாராட்டினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது.
Instagram: divyabharathioffl
ரசிப்பவர்களும், வெறுப்பவர்களும் எப்போதுமே இருக்கிறார்கள். விமர்சனங்களை பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும், அன்பாகவும் இருப்போம்” என்றார்.