இமயமலையில் நடிகையுடன் அஜித்தின் அட்வென்சர் பயணம்
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் கரடு முரடான பாதையில் மாஸாக பைக் ஓட்டியிருக்கிறார்.
ஒரு வாரம் இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித்
ஏ.கே. 61 படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பயணம் குறித்து மஞ்சு வாரியர்
எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்சர் ரைடர்ஸ் (சாகச பயணம்) இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்.
உலகின் 12 வது உயரமான கணவாயான தக்லாங் லா-வில் நடிகர் அஜித்