உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது.
ஆண்டுக்கு 1½ கோடி பேர் ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
மதுபானங்களுக்கு அடிமையாவது மனித ஆற்றலை அழிக்கிறது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மது காரணமாக அமைகிறது.
குடிப்பழக்கம் குடும்பங்களில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சிகரமான குடும்ப சூழலை அழிக்கிறது.
தொடர்ச்சியாக மது அருந்தும் ஒருவருக்கு மன குழப்பம், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
மது குடிப்பதால் மூளையின் ஆற்றல் சிதைந்து சிந்திக்கும் திறன் மற்றும் முடிவுகள் எடுக்கும் திறன் குறைந்து போவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும். சமீபத்திய சம்பவங்களை கூட மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.
மதுபானத்தால் மற்ற உறுப்புகளை விட மூளை மிக கடுமையாக பாதிக்கப்படும் போது அது மூளை தேய்மான பாதிப்பை உருவாக்குகிறது.
தினமும் மதுபானம் அருந்துவதால், கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. எனவே மது அருந்துவதை நிறுத்தினால் பல்வேறு பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.