உலகில் உள்ள வித்தியாசமான கிராமங்கள்..! இதோ...
உலகில் மிக அதிகமாக மழை பெய்யும் இடமாக மேகாலயாவில் உள்ள மாசின்ரம் (Mawsynram) கிராமம் திகழ்கிறது.
வருடம் முழுவதும் மழை பொழிவதால்,இங்குள்ள காசி இனமக்கள் மூங்கில் மற்றும் வாழையிலையைப் பயன்படுத்தி ஆளுயரக் குடையுடன் வலம் வருகின்றனர்.
மத்திய சீனாவில் உள்ள தியான்சு மலைப்பகுதியில் உள்ளது கங்ஷி டாங்க் (Ganxi Dong) கிராமம்.
இந்தக் கிராமத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவரும் தற்காப்புக்கலை கற்பது இங்கு காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
'நெதர்லாந்தின் வெனிஸ்' என்றழைக்கப்படுகிறது கீத்தூர்ன் (Giethoorn) கிராமம்.
இந்தக் கிராமத்தில் சாலைகளே கிடையாது.சிறிய படகுகள் மூலம் மட்டுமே இந்தக் கிராமத்தில் பயணிக்க முடியும்.
இத்தாலியில் இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ளது விகனெல்லா (Viganella) கிராமம்.
இந்தக் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சூரிய ஒளி விழுவதில்லை.