ஆச்சரியமூட்டும் வகையில் உலகின் மிகப் பெரிய தீவுகள்.!!

கிரீன்லாந்து: டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாகும். இதன் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டிருப்பதால், சிறிய பகுதி மட்டுமே மக்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது.
நியூ கினி: உலகின் இரண்டாவது பெரிய தீவான இது, அடர்த்தியான மழைக்காடுகள், மலைகள் மற்றும் தனித்துவமான வனவிலங்குகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெயர் பெற்றது.
போர்னியா: இந்த தீவானது மலேசியா, இந்தோனேசியா மற்றும் புருனை ஆகிய மூன்று நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு இந்த தீவு பெயர் பெற்றது. அழிந்து வரும் குரங்கு இனமான ஒராங்குட்டான் இந்த தீவுகளில் வசிக்கிறது.
மடகாஸ்கர்: நான்காவது பெரிய தீவான மடகாஸ்கர், அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு காணப்படும் பல இனங்கள் பூமியில் வேறு எங்கும் காணப் படுவதில்லை.
பாபின் தீவு: கனடாவில் அமைந்துள்ள ஐந்தாவது மிகப்பெரிய தீவான இது, மலைகள் மற்றும் பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
சுமத்ரா: இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சுமத்ரா தீவு ஆறாவது பெரிய தீவாகும். பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள், தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் எரிமலைகளுக்கு இந்த இடம் பெயர்பெற்றது.
ஹோன்சு: மலைகள், சமவெளிகள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளை கொண்டது ஹோன்சு தீவு. இது ஜப்பானில் அமைந்துள்ள உலகின் ஏழாவது பெரிய தீவாகும்.
விக்டோரியா தீவு: கனடிய ஆர்ட்டிக் தீவுக்கூட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் இந்த தீவு, பனிக்கட்டிகள் மற்றும் ஆர்ட்டிக் வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது.
கிரேட் பிரிட்டன்: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் போன்ற மூன்று நாடு களுக்கு இடையில் அமைந்துள்ளது. தாழ்நிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் போன்ற பல்வேறு நிலப் பரப்பை கொண்டுள்ளது.
எல்லெஸ்மியர் தீவு: ஆர்ட்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இது, பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. கரடுமுரடான நிலப்பரப்புக்கு இந்த தீவு பிரபலமானது.