வெயிலில் அதிகம் வேலை செய்பவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஆபத்து அதிகமா?
ஹீட் ஸ்ட்ரோக் என்பது தமிழில் வெப்ப பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
மனித உடலின் சராசரி வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். வெப்ப பக்கவாதம் என்பது உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் உயரும் போது ஏற்படும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும்.
பொதுவாக உடல் அதிக வெப்பம் அடையும்போது வியர்வை ஏற்பட்டு, உடல் வெப்பம் சமநிலைக்கு கொண்டு வரப்படுகிறது. உடல், இதனை செய்ய தவறும் போது வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது.
யாரை அதிகம் பாதிக்கும் : சர்க்கரை நோயாளிகள்.
இதய செயலிழப்பு நோயாளிகள்
கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள்
உடல் எடை அதிகம் உடையவர்கள்
வெயிலில் அதிக நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியவர்கள்.
இதன் முக்கியமான அறிகுறி உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.