ஓட்ஸ் நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஓட்ஸை பலரும் தங்கள் காலை உணவாக சேர்த்து கொள்கின்றனர்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பீட்டா-குளுகோகன் உள்ளது. இவை வெள்ளை ரத்த அணுக்களைத் தூண்டுகிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இவை குளுக்கோஸ் அளவைக் குறைத்து, ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கிறது.
ஓட்ஸில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து குடலில் உணவு செலவழிக்கும் நேரத்தை அதிகரித்து குடலைச் சுத்தப்படுத்துகிறது. இது மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது.
ஓட்ஸ் லிக்னான்களின் கலவையாகும் . இது கருப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தொடர்பான ஹார்மோன் தொந்தரவுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து வயிற்று கொழுப்பை எதிர்த்துப் போராடுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.
ஓட்ஸில் உள்ள துத்தநாகம் சருமத்தில் உள்ள பருக்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
ஓட்ஸ் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது பொடுகு தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.