அவரைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
இதில் கால்சியம், புரோட்டின், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம்,காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
அவரையில் ஜிங் அதிகம் காணப்படுவதால் புற்றுநோய்க்கு எதிராக போராட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அவரைக்காய் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைகிறது.
இதில் உள்ள கரையக்கூடிய பைபர் சத்து (soluble fibre) நமது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்க உதவுகிறது.
அவரைக்காயில் அடங்கி இருக்கும் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எலும்புகள் மாற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதிலிருக்கும் பொட்டாசியம் தசைகளை வலுப்படுத்த மற்றும் தசை பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
அவரையில் இருக்கும் மாங்கனீஸ், ஜிங்க் உள்ளிட்ட மினரல்ஸ் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களை சமாளிக்க உதவுகின்றன.
இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் அமினோ ஆசிட்களை கொண்டுள்ளது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.