கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?
கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுவதால் இவை ரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கிறது.
உடலில் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க செய்கிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
கருப்பு உளுந்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமான மண்டலத்தில் சரியாக வேலை செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவி புரிகிறது.