தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பேரிச்சம்பழங்கள் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைந்துள்ளது.
பேரிச்சம் பழத்தில் ஆன்ட்டிஆக்சிடென்ட் தன்மை உள்ளதால், இது சருமத்தை இளமையாக வைக்கவும், சரும செல்களின் பாதிப்பை குணமாக்கவும் உதவுகிறது.
தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக பராமரிக்கிறது.
பேரிச்சம்பழத்தில் நிறைந்திருக்கும் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகின்றன.
பேரிச்சம்பழத்தில் சரியான அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சோகையை சரிசெய்யும் குணம் கொண்டது.