`பிளாக் காபி'யில் இவ்வளவு நன்மைகளா?
பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவதுதான் நல்லது என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.
பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின் பி2, பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி இல்லாத பானமாகவும் விளங்குகிறது.
பிளாக் காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கலாம்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க பிளாக் காபியை தொடர்ந்து பருகலாம்.
இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கக்கூடும்.
பிளாக் காபி பருகுவது சோர்வை விரட்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தன்மைகொண்டது.
பிளாக் காபி மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன்கொண்டது.
தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகலாம். அதற்கு மேல் பருகினால் தூக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.