குங்குமப்பூ குடிநீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

குங்குமப்பூவில் உள்ள முக்கிய வேதிப்பொருட்களான குரோசின், பிக்ரோகுரோசின், சாப்ரனால் ஆகிய வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளன.
குங்குமப்பூவில் காணப்படும் குரோசின் என்ற ரசாயன கலவைகள் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவலாம்.
குங்குமப்பூ சப்ளிமெண்ட்ஸ்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தை குறைக்கக்கூடும்.
கசப்பு சுவையும், வெப்பத் தன்மையும் உடைய குங்குமப்பூவானது வாதம், கபம் சார்ந்த நோய்களைப் போக்க உதவுவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.
குங்குமப்பூ ஆண், பெண் இருபாலருக்கும் இல்லற வாழ்வில் நாட்டத்தை உண்டுபண்ணும் என்கின்றன நவீன ஆய்வுகள்.
குங்குமப்பூவில் உள்ள மகத்தான வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது.
குங்குமப்பூவில் தியாமின் மற்றும் ரிபோப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
குங்குமப்பூ முகத்திற்கு கூடுதல் பொலிவு தரக்கூடியது. ஒட்டுமொத்த சரும அமைப்பையும் மேம்படுத்தக்கூடியது.
Explore