சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

credit: freepik
எலும்பு ஆரோக்கியம்: பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், எலும்பு அடர்த்தியை அதிகரித்து, ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
credit: freepik
நினைவாற்றல் அதிகரிக்கும்: இதில் கோலின் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. இயல்பாகவே அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
credit: freepik
ஊட்டச்சத்து நிறைந்தது: புரதம், கலோரிகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அதிகம் இதில் உள்ளது. இவை, நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் சரியான அளவை வழங்குகிறது.
credit: freepik
நோய் எதிர்ப்பு சக்தி: சிக்கன் சூப் சாப்பிடுவது சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
credit: freepik
புத்துணர்ச்சி; கோழிக்கறியில் செரோடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
credit: freepik
முழுமையான உணவு; கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதத்தின் மூலங்கள், நீங்கள் குறைவான உணவு எடுத்துக்கொண்டாலும், நிறைவான உணர்வை கொடுக்கக்கூடியது. அதாவது, உங்களின் யானைப்பசியை போக்க, சிறிதளவு சிக்கன் போதுமானது.
credit: freepik
புற்றுநோய் அபாயம் குறையும்; தினசரி உங்கள் உணவில் கோழிக்கறியை சேர்த்து வந்தால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
credit: freepik
Explore