பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா?
வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாகதான் இருக்கின்றன. அந்த வகையில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மற்றும் இதில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளது.
பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
பச்சை வாழைப்பழத்தில் 'ஸ்டார்ச்' அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.
ரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது.
பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.
பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.