முளைகட்டிய கோதுமை, அதிக ஊட்டச்சத்துக்களையும், ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டிருக்கும்.
முதுகுவலி மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் சம்பா கோதுமையை வறுத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
சம்பா கோதுமை உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
சம்பா கோதுமை மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, எடை குறைப்புக்கு உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கிறது, மேலும் மொத்த கொழுப்பு மற்றும் டிரைகிளைசிரைட் அளவுகளையும் கட்டுப்படுத்துகிறது