எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டையின் மஞ்சள் கரு...!
முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான வைட்டமின் ஈ உள்ளது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் பைலோகுவினோன் வடிவில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது ரத்தத்தின் சரியான உறைதலை உறுதி செய்கிறது.
முட்டையின் மஞ்சள் கரு ரைபோப்ளேவின் வளமான மூலமாகும். இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது. இது நரம்பு ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் D-ன் இயற்கையான மூலமாகும். இது எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.