விக்கல், சின்னதொரு பிரச்சினைதான். மூச்சுக்குழல் தசையின் திடீர் சுருக்கத்தால் இது ஏற்படுகிறது.
பெரும்பாலான நேரங்களில் தானாகவே நிற்கும். ஆனால் நீண்ட நேரம் விக்கல் தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு டீஸ்பூன் வெண் சர்க்கரையை நாக்கில் வைத்து மெதுவாக சாப்பிடவும். இது நரம்புகளை மறுசீரமைக்க உதவும்.
குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம். மேலும் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு நாக்கில் இட்டால் விக்கல் நிற்கும்.
ஆழமாக மூச்சை இழுத்து, 10 முதல் 15 வினாடிகள் வரை மூச்சை பிடித்துக்கொண்டு பின்னர் மெதுவாக வெளியே விடவும்.
மூக்கையும் வாயையும் மூடி சில விநாடிகள் மூச்சை வெளியில் விடாமல் இருக்க வேண்டும். கவனத்தை மாற்றி வேறு ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் சில நேரங்களில் விக்கல் தானாக நிற்கும்.
கவனம் தேவை: விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால் சில உடல்நல பாதிப்புகள் அதற்கு காரணமாக இருக்கலாம்.
உதாரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நரம்பு தளர்ச்சி போன்ற காரணங்களால் விக்கல் உண்டாகலாம். அப்படியானால் மருத்துவரை கண்டிப்பாக அணுகுவது அவசியமானது.