8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி...!!!
AFP
இலங்கையில் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது.
AFP
இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
AFP
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
AFP
இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
AFP
பின்னர் களம் இறங்கிய இலங்கைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
AFP
பும்ரா ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.
AFP
இதன் பின்னர் சிராஜ் வீசிய 4-வது ஓவரில் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா ஆகிய 4 பேரும் அவுட் ஆகி வெளியேறினர்.
AFP
மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார்.
AFP
தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது.
AFP
இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
AFP
இறுதியில் 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
AFP