காலை உணவாக அவல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசியை விட அவல் ஒரு சிறந்த உணவாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது.
உடலில் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் அவல் கொண்டுள்ளது. இது புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது.
உடல் மற்றும் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கரைத்து ஆரோக்கியமான உடல் எடையை பெற உதவும்.
இதில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்ற விளைவாக ஏற்படும் நல்ல பாக்டீரியாக்களை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
அவலில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது உங்களை சுறுசுறுப்பாக இருக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.