நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அவகோடா..!
அவகோடா பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6, சி, மற்றும் வைட்டமின் கே1 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
அவகோடாவில் உள்ள பொட்டாசியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு உதவுகிறது.
அவகோடாவில் லுடீன் மூலக்கூறு அதிகளவில் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடுவது நல்லது. இது குழந்தை மூளை வளர்ச்சியை அதிகரிப்பதுடன், பால் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
இதில் குறைந்தளவு கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது.
அவகோடா பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான பிரச்சினையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.