இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் மேலும், பெண்களுக்கு கருப்பையை வலுவாக்கவும் உதவுகிறது..
வாழைப்பூவை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொறியவிடவும்.
கடுகு பொறிந்ததும் கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 ஆகியவற்றை சிறிது வதக்கவும்.
பின்னர் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பின்பு சிறிய வெங்காயம் மற்றும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் தெளித்து ஒரு கொதி வந்ததும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் வற்றியதும் இறக்கும் முன்பு மிளகு தூள் சேர்த்து வதக்கி பின்பு தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
அதன் பின்னர் வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். இதோ சுவையான வாழைப்பூ சாதம் ரெடி.