பற்களை பாதுகாக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்க!
credit: freepik
தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.
credit: freepik
சால்மன், டுனா, கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்கள், ஈறுகளை நோயில் இருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
credit: freepik
பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அவை பற்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும்.
credit: freepik
தயிரில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி என ஏதாவதொரு வகையில் பால் பொருட்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
credit: freepik
நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் வாய் வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தாதுப்பொருட்களை கொண்டுள்ளன.
credit: freepik
கிரீன் டீயில் புளோரைடு மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அது பற்களை வலுப்படுத்தவும், துவாரங்களைத் தடுக்கவும் உதவும். மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஈறு நோயைத் தடுக்க உதவி புரியும்.
credit: freepik
சர்க்கரை கலக்காத சுவிங்கத்தை சுவைப்பதும் வாய் வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். ஏனெனில் சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
credit: freepik
தண்ணீர் நிறைய பருகுவதும் அவசியமானது. இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பற்சிதைவில் இருந்து பாதுகாக்கும் தாதுக்களும் நீரில் உள்ளன.