பீட்ரூட் உடல் வலிமையை அதிகரிக்கும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கும்.
பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கும்.
உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரிப்பதன் மூலம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
பீட்ரூட்டில் நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவும்.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை சரும சேதத்தை சரி செய்து சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.