பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் A, C, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டில் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது எலும்பு சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கலாம்.
பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகின்றன.
இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் உடல் வலிமை அதிகரித்து, நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்க கூடும்.
இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது, இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு வழிவகுக்கலாம்.
இதில் பீட்டாலைன் என்ற நிறமிகள் அதிக அளவு காணப்படுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது.