ஆல்பக்கோடா பழத்தின் நன்மைகள்..!

ரஷ்யாவிலுள்ள சாமர்கண்ட் என்ற பகுதியில் இருந்துதான் இந்தப் பழம் உலக நாடுகளுக்குப் பரவியது.
இந்தப் பழத்தின் உண்மையான பெயர் "ஆல்புக்காரா' என்பதாகும்.
இந்த பழத்தில் வைட்டமின் ஏ' "பி', "பி2', "சி', இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
காய்ச்சலின்போது வாய்க் கசப்பு, குமட்டல் ஏற்படும்பொழுது ஆல்பக்கோடா பழம் ஒன்றை வாயில் போட்டு மென்றால் புத்துணர்ச்சி ஏற்படும்.
நாக்கில் சுவை இழந்தவர்கள், உடல் எரிச்சல், தலைவலி, வாந்தி, உடல் சூடு உள்ளவர்கள் தினமும் தொடர்ந்து ஆல்பக்கோடா பழம் சாப்பிட்டு குணம் பெறலாம்.
இதிலுள்ள இரும்புச்சத்து உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.