பாதாம் பிசினில் கார்போஹைட்ரேட்கள், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் தன்மைகொண்டது.
பாதாம் பிசினில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உதவுகிறது.
பாதாம் பிசின், உடல் வலி மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்துகிறது. இதனால் தசைகள் வலுவடைகிறது.
பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் 90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்குவதற்கு பாதாம் பிசின் உதவுகிறது. இது உடலை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.