வெற்றிலை குளிர்ச்சியானது. தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும்.
பொடுகு: வெற்றிலையை அரைத்து அதனுடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து வந்தால், பொடுகு காணாமல் போய்விடும்.
முடி உதிர்தல்: வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சினையை குறைக்கலாம்.
பல் சொத்தை: வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.
துர்நாற்றம்: வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு வயிற்றில் நுண்கிருமிகள் இருப்பதுதான் காரணம். வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.
முகப்பரு: வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும்.
வியர்வை நாற்றம்: உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதால் வியர்வை நாற்றம் அடியோடு அகலும்.
எரிச்சல்: தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி, எரிச்சல் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக வெற்றிலை விளங்குகிறது. இதில் ஆண்டி இன்ப்ளேமேட்ரி, ஆண்டி பேக்டீரியல் போன்ற பண்புகள் உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.