கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என எல்லா வைட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
கொத்தமல்லி இலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜீரண சக்தியை எளிதாக்கவும் உதவுகிறது.
கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது.
கொத்தமல்லி இலை கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது.
கொத்தமல்லி இலையின் பச்சை நிறத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணமாகும். இது நொதி செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது.
கொத்தமல்லி இலையில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இவை ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகிறது.