அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

அருகம்புல் இயற்கையிலேயே குளிர்ச்சித் தன்மை கொண்டது என்பதால் உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது.
தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்
மலச்சிக்கல் தீர்க்கும் மருந்தாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் இவை செயல்படுகிறது.
பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை வெண்மையாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை இதை எடுத்துகொள்வதன் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்.
தோல் நோய்க்கும், சேற்றுப்புண்ணுக்கும் அரிய மருந்து இந்த அருகம்புல்.
எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு.
நோயாளிகள் மட்டுமல்ல உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை குடிக்கலாம்.