தினமும் வெந்நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்..!
வெந்நீர் அருந்துவது உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான செரிமானத்தை தூண்டுகிறது.
வெந்நீர் உடலை சுத்தப்படுத்தவும் அதிலிருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
வெந்நீர் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதால் சளி, அலர்ஜி , இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
வெந்நீர் அருந்துவதால் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும் வாசோடைலேஷன் செயல்முறையை ஊக்குவிக்கிறது.
வெந்நீர் மலச்சிக்கல் பிரச்சினையை குறைத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
வெந்நீர் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும், குறிப்பாக தொண்டை தொற்றுக்களை விரட்டியடிக்கும்.
உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த வெந்நீர் உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து அமைதியாக உணர வைக்கிறது.
வெந்நீர் வீக்கம் மற்றும் வலியைப் போக்க உதவுகிறது.