பூண்டு கலந்த பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள், பூண்டு பால் குடிப்பதன் மூலம் நல்ல தீர்வை காணலாம்.
பூண்டு கலந்த பால் ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையை குணமாக்குகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நுரையீரல் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள், பூண்டு பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சி குணமாகக்கூடும்.
பூண்டு பாலானது செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.