வெதுவெதுப்பான நீரில் மிளகு தூளை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு குடல் ஆரோக்கியம் முதன்மையானது. தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும். ஒரு மாதத்திலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் 'ஸ்டெமினா' அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஏனென்றால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்துவிடும்.
கீல்வாதம், மூட்டு வலி, சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது.
அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.