கண்கள் முதல் எலும்பு வரை முருங்கை இலையின் நன்மைகள்..!
முருங்கை கீரையில் புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, ரெட்டினால் மற்றும் வைட்டமின் சி போன்ற பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.
முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.
இதில் கிடைக்கக் கூடிய நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
முருங்கை கீரை மந்தத்தன்மையை போக்கி, உடல் சூட்டை குறைக்கும் குணங்களை கொண்டது.
முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சினை எளிதில் குணமாகும்.
இதில் உள்ள வைட்டமின் சி பருவகால நோய்களின் அபாயத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முருங்கை கீரையில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகளை வலிமையாக்குகிறது.
முருங்கை கீரை கணைய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
அல்சர் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.