தேனில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு நிறைந்துள்ளன. இவை தலைமுடி உதிர்தல் பிரச்சினையை நீக்கக்கூடும்.
பாதாமில் உள்ள ரிபோபிளேவின் என்கிற வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்யக்கூடும்.
பாதாமை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், முக சுருக்கங்கள் குறைந்து, சருமத்தை பளபளப்பாக வைக்கக்கூடும்.
இவை ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் பருமனை குறைக்கக்கூடும்.
பாதாமின் ப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும்.
தேனில் ஊறவைத்த பாதாமில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கக்கூடும்.
பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இது உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கிறது.
ரத்த சோகை பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் தேனில் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.