தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
முந்திரியில் உள்ள ஒமேகா 3, பேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முந்திரியில் உள்ள காப்பர்,தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற உதவுகிறது.
முந்திரி பருப்புகளில் அதிக அளவு லுடீன் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவை நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.
முந்திரிகளில் நிறைந்திருக்கும் மெக்னீசியம், ஒற்றை தலைவலியின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
முந்திரி பருப்பு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது.
முந்திரி பருப்புகளில் இதய செயல்பாட்டை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.