சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நம் உடலுக்கு தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், சிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை கோதுமை சப்பாத்தியில் நிறைந்துள்ளன.
சப்பாத்தியில் உள்ள சிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும்.
இதில் இருக்கும் கார்போ ஹைட்ரேட், நம் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
இதிலிருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடும்.
சப்பாத்தி உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும் திறன்கொண்டது.
உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சப்பாத்தி சிறந்த தேர்வாகும்.
ரத்த அழுத்தத்தின் அளவை சமநிலையில் பராமரிக்க சப்பாத்தி உதவக்கூடும்.
சப்பாத்தியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் போன்ற செரிமான அசவுகரியங்களை போக்க உதவக்கூடும்.
கோதுமையில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது. இது தசை வலிமையை அதிகரித்து, தசை சேதத்தை குறைக்க செய்கிறது.