தினமும் கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
கிவி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நல்ல செல்களைப் பாதுகாக்கின்றன.
கிவி பழம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கிவி பழமானது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா பிரச்சினைகளை குறைத்து, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கிவி பழம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும்.
கிவி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கக்கூடும்.
கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.