வெயில் காலத்தில் கிர்ணிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
கிர்ணிப்பழம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி.இ. ஏ மற்றும் பொட்டாசியம். மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.
இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடும்.
கிர்ணிப்பழம் சிறுநீரக கற்கள் பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மைகொண்டது.
கிர்ணிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
கிர்ணிப்பழத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்துக்கள், உடல் எடையை குறைக்கும் திறன்கொண்டது.
கிர்ணிப்பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
இதில் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கக் கூடியது.
கிர்ணிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.