நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல் கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
மூளை நரம்புகளைத் தூண்டும் செரோடோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும்.
இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.