அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
அன்னாசிப்பழத்தில் மாங்கனீஸ் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கண்களைப் பாதிக்கும் மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலைன்கல் கீல்வாதம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை எதிர்த்து போராடும் தன்மைக்கொண்டது.
அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இருப்பதால், ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முகப்பரு, தோல் வெடிப்பு மற்றும் தோல் சேதம் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
இருமல் மற்றும் சளி வருவதற்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மைக்கொண்டது.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது.