சாரைப் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

சாரைப் பருப்பில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2 மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளது.
சாரைப் பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
சாரைப் பருப்பு சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு மட்டுமல்லாமல் கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவக்கூடும்.
சாரைப் பருப்பு மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்து, செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்கக்கூடும்.
இது ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்யும் தன்மை கொண்டது. ஹார்மோன்களை முறையாகச் செயல்பட தூண்டக்கூடும்.
சாரைப் பருப்பில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இவை எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
சாரைப் பருப்பு கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.