சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
சூரியகாந்தி விதை துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.
சூரியகாந்தி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஈ உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
அதிக நார்ச்சத்து கொண்ட சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கின்றன.
சூரியகாந்தி விதைகள் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் தாமிரம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.
சூரியகாந்தி விதை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளில் உடலின் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் என்சைம்கள் நிறைந்துள்ளன.